சின்னத்தம்பி யானையால் யாருக்கும் பாதிப்பு இல்லை - திருப்பூரில் சீமான் கருத்து | There is no impact on the Chinnathambi elephant - Seeman

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (12/02/2019)

கடைசி தொடர்பு:07:33 (12/02/2019)

சின்னத்தம்பி யானையால் யாருக்கும் பாதிப்பு இல்லை - திருப்பூரில் சீமான் கருத்து

சீமான்
 

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியை கம்யூனிஸ்ட்டுகள் விமர்சிப்பதற்கு அரசியல்தான் காரணம். என்னைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜி நேர்மையானவர். மிகவும் எளிமையானவர். அப்படிப்பட்ட எளிமையையே நாங்களும் இங்கு விரும்புகிறோம்.

மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸும், தற்போது ஆட்சிபுரியும் பா.ஜ.கவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். ரஃபேல் போர் விமான விவகாரத்தில் கூட பா.ஜ.க எந்தவித விவாதத்துக்கும் தயாராக இருந்ததில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தமிழக மக்களால் அதிகம் நேசிக்கப்படும் தலைவர்களின் பெயர்களைச் சொல்லி நாங்கள் அவர்களைப்போல் ஆட்சியை நடத்துகிறோம் என்று பேசுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுதான் ஆளும் அ.தி.மு.க அரசும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. வனங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால்தான், வன விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்துகொண்டு இருக்கின்றன. ஆனால், சின்னத்தம்பி யானையால் இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை'' என்றார்.