``த.மா.கா-வும் அதற்கு விதிவிலக்கல்ல”- தேர்தல் கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் கருத்து | G.K.Vasan spoke about lok sabha Election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

கடைசி தொடர்பு:07:55 (12/02/2019)

``த.மா.கா-வும் அதற்கு விதிவிலக்கல்ல”- தேர்தல் கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் கருத்து

``நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடமாட்டோம். ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம்” எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

ஜி.கே.வாசன்

காஞ்சிபுரத்தில் நடைபெறும் த.மா.கா பிரமுகர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காஞ்சிபுரம் வந்திருந்தார் ஜி.கே.வாசன். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தவர்,  ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி வைத்தே போட்டியிடக்கூடிய எண்ணத்தில் செயல்படத் தொடங்கி இருக்கின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதற்கு விதிவிலக்கல்ல. நான் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்களிடம் அவர்களது கருத்தை கேட்டுக்கொண்டு வருகிறேன். மாவட்டத் தலைவர்களும் மக்களுடைய எண்ணங்களை என்னிடம் பிரதிபலித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் ஒத்த கருத்துடைய கட்சிகளோடு தேர்தலிலே கூட்டணி அமைத்துப் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரிவிப்பேன். தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த  இயக்கமும் தங்களுடைய தேர்தல் இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க