சென்னையில் நில அதிர்வு - தி.நகர், சைதாப்பேட்டையில் உணர்ந்த மக்கள்! | Earthquake felt in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (12/02/2019)

கடைசி தொடர்பு:10:55 (12/02/2019)

சென்னையில் நில அதிர்வு - தி.நகர், சைதாப்பேட்டையில் உணர்ந்த மக்கள்!

சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சென்னைக்கு வட கிழக்கே வங்கக் கடல் பகுதியில் இன்று காலை சரியாக 7:02 மணி லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக நெட்டிசன்களும் தங்கள் பகுதியில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் போன்ற பல பகுதிகளில் வாழும் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். வெறும் 2 முதல் 3 நொடிகள் மட்டுமே இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.