`அறநிலையத்துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை!’ - உயர் நீதிமன்றம் | TN Endowment board works are not satisfied says highcourt

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (12/02/2019)

`அறநிலையத்துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை!’ - உயர் நீதிமன்றம்

கோயில் நிலங்களை மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

அறநிலையத்துறை

தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், கோயில் நிலங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,`கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக, சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்துக்குப் பலமுறை புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆணையர் அலுவலகத்தில் இருந்து எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை. புகார் குறித்து நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மதுரை உயர்நீதிமன்றம்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, `கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகள் குறித்த பட்டியலை சமர்பிக்க வேண்டும். அரசு கருவூலத்தில் கோயில் நிலங்களின் பட்டியல் உள்ளதா என்பதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அறநிலையத்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி  தெரிவித்தனர்.