``தேர்தலுக்கு முன்கூட்டியே விஜயகாந்த் வருவார்!" - தொண்டர்களை உற்சாகப்படுத்திய விஜய பிரபாகரன் | Vijayakanth will come ahead of the election! - says vijaya prabhakaran

வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (13/02/2019)

கடைசி தொடர்பு:07:30 (13/02/2019)

``தேர்தலுக்கு முன்கூட்டியே விஜயகாந்த் வருவார்!" - தொண்டர்களை உற்சாகப்படுத்திய விஜய பிரபாகரன்

விஜய பிரபாகரன்

 

தே.மு.தி.க கொடிநாள் விழா, சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு பேசுகையில், ``தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக அரசியல் கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஐந்து வருஷங்களும் பணம் கொடுக்கப்போவதில்லை. ஒருமுறைதான் கொடுப்பார்கள். அதனால் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு வாக்களியுங்கள். அதனால், தே.மு.தி.க-வுக்கு வாக்களியுங்கள். எங்கள் கட்சி உங்களுக்கு நல்லது செய்யவில்லை எனில், என்னை நேரில் வந்து கேளுங்கள். நிச்சயம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க இரட்டை இலக்க சதவிகிதத்தில் வாக்குகளைப் பெறும். தொடர்ந்து தே.மு.தி.க ஏறுமுகத்துடன்தான் இருக்கிறது. 

விஜய பிரபாகரன்

கேப்டன் வருவார். தேர்தலுக்கு முன்கூட்டியே வருவார். அனைத்துத் தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்வார். எல்லோரும் தைரியமாக இருங்கள். கூட்டணி முடிவுகளையெல்லாம் கேப்டன் முடிவெடுப்பார். அதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாம் அமைக்கும் கூட்டணி, வெற்றிக்கூட்டணியாக அமையும். எல்லோரும் மறைமுகமாகக் காலில் விழுந்துகொண்டிருக்கிறார்கள். மிக விரைவில், `தே.மு.தி.க இல்லையெனில் நாங்கள் இல்லை' என அனைத்துக் கட்சியினரும் சொல்வார்கள். கேப்டன் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு உழைத்து, நம்மைப் பற்றி தவறாகப் பேசியவர்களின் பேச்சுக்களைப் பொய்யாக்குவோம்" இவ்வாறு தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.