மாநகராட்சியாகும் ஓசூர், நாகர்கோவில் - சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்! | hosur and nagarkovil willbe promote as corportation

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (13/02/2019)

கடைசி தொடர்பு:10:49 (13/02/2019)

மாநகராட்சியாகும் ஓசூர், நாகர்கோவில் - சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்!

ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. 

சட்டசபை

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. விவாதத்தின் போது வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கிடையே இன்றைய கூட்டத்தொடரில் ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் சட்டமுன்வடிவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்ய உள்ளார். 

மாநகராட்சி

இந்த சட்ட முன்வடிவு இன்று நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயரும். தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் இந்த புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதால் இனி தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகள் இருக்கும். அரசின் இந்த அறிவிப்பால் ஓசூர், நாகர்கோவில் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக ஓசூர், நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றபோது இந்த இரண்டு நகரங்களையும் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க