காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - உயிரை மாய்த்துக்கொண்ட ஆயுதப்படை காவலர்! | madurai police Guard suicide for love problem

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:11:10 (13/02/2019)

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - உயிரை மாய்த்துக்கொண்ட ஆயுதப்படை காவலர்!

நாளை, உலக காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலுக்காக ஆயுதப்படை காவலர் உயிரை விட்ட சம்பவம் பலரையும் வேதனையடையச் செய்துள்ளது.

காவலர் சதீஸ்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நக்கலப்பட்டியைச் சேர்ந்த வன ராசா என்பவரின் மகன் சதீஷ், பழநியில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவருகிறார். இவர், ஒரு பெண்ணை காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் சதீஷ் வீட்டில் தெரியவர, அவரின் காதலுக்கு குடும்பத்தார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.  மேலும், உறவினர் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சதீஷ்  வீட்டில்  எச்சரித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த சதீஷ் மனம் உடைந்ததால், இன்று அதிகாலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அவரது உடலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நாளை பிப்ரவரி - 14ல் உலக காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலுக்காக ஆயுதப்படை காவலர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரையும் வேதனையடையச்செய்துள்ளது.