‘இளைஞர்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தரணும்’ - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்! | Minister Jayakumar Speech at Presidency college

வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (13/02/2019)

கடைசி தொடர்பு:11:46 (13/02/2019)

‘இளைஞர்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தரணும்’ - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்!

சென்னை மாநில கல்லூரியில் இன்று  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “ இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு விளையாட்டுத் துறைக்காக மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமார்

இது சமூக நீதிக்கான மாநிலம், ஏழை மக்களை கை தூக்கி விடும் மாநிலம் இங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது அதே போன்றுதான் தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ. 2,000 வழங்கப்படவுள்ளது. 

இளைஞர்களுக்கு எந்த மாநிலத்திலும் இல்லாத பல சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. வேலை வாய்ப்பு துறை மூலமாகப் பயிற்சி முகாம்கள் நடத்தி பல லட்சம் பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்களுக்குத்  திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 80 லட்சம் இளைஞர்கள் அ.தி.மு.க இளைஞர் பாசறையில் உள்ளனர்.  இன்னும் பல இளைஞர்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னும் பல சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

நாங்கள் தேர்தலை ஒத்திவைக்கவில்லை. அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் ஒன்றும் தேர்தல் கமிஷன் இல்லை. எப்போது எப்படித் தேர்தல் அறிவித்தாலும் அதை நாங்கள் எதிர்கொள்ள தயார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது வருகின்றன. தி.மு.க, அ.ம.மு.க மட்டும்தான் எங்களின் எதிரி. அந்த கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த அ.தி.மு.கவுக்கு எந்த பிரச்னையுமில்லை’ எனத் தெரிவித்தார்.