`தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தை எதிர்த்து வழக்கு' - நாளை விசாரணை! | case against tamilnadu govt new scheme

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (13/02/2019)

கடைசி தொடர்பு:11:55 (13/02/2019)

`தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தை எதிர்த்து வழக்கு' - நாளை விசாரணை!

தமிழக அரசின் சிறப்பு நிதி ரூ.2,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. விவாதத்தின்போது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

வழக்கு

இந்தப் பணம், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.2,000 செலுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தேர்தல் வரும் நேரத்தில் மக்களைக் கவர்வதற்காக இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார் எனக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழக அரசின் செயல் சட்டவிரோதம் என அவர் தொடுத்துள்ள இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க