`பேச்சுவார்த்தை முடிந்தது; பா.ஜ.க கூட்டணி உறுதி' - முரளிதர் ராவ்! | "In Tamil nadu BJP coalition has been confirmed "said by BJP National general secretary Muralidhar Rao

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (13/02/2019)

கடைசி தொடர்பு:12:20 (13/02/2019)

`பேச்சுவார்த்தை முடிந்தது; பா.ஜ.க கூட்டணி உறுதி' - முரளிதர் ராவ்!

“தமிழகத்தில் கூட்டணி வைக்க மோடி விரும்புகிறார்” என பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

முரளிதர் ராவ்

மத்திய அரசு, மீன்வளத் துறைக்கு என்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் சார்ந்த பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் மீனவர்களிடம் கேட்டு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வது தொடர்பாக புதுச்சேரி வந்திருந்தார், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ். புதுச்சேரி – கடலூருக்கு இடையேயுள்ள பூரணாகுப்பம் தனியார் விடுதியில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று, தங்களுடைய கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்தில், புதுச்சேரி பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மோடி

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முரளிதர் ராவ், ”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதேபோல, வரும் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணிகுறித்து அதிகாரபூர்வகமாக அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில், பா.ஜ.க கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்” என்று அவர் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க