வண்ண வண்ண ஓவியங்கள் - கலைக்கூடமாகும் சென்ட்ரல் ரயில் நிலையம்! | Chennai Central Railway station

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:11:18 (14/02/2019)

வண்ண வண்ண ஓவியங்கள் - கலைக்கூடமாகும் சென்ட்ரல் ரயில் நிலையம்!

ரயிலைப் பிடிக்க அவசரமாகச் செல்லும் பயணிகள் கூட ஒரு கணம் நின்று இரசித்துவிட்டுச் செல்லுவதைக் காண முடிகிறது. இந்த ஓவியங்களையும், புகைப்படங்களையும் தலை அன்னார்ந்து பார்க்கிறவர்கள் ஒரு பிரம்மாண்டமான கலைக்கூடத்தின் உள்ளே நுழைந்துவிட்டது போல உணர்வார்கள் எனச் சொன்னால் அது மிகையில்லை

வண்ண வண்ண சுவரோவியங்களால் நம்மை வரவேற்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். ஓவியங்கள் மட்டுமின்றி ரயில் நிலையச் சுவற்றின் மேற்புறங்களைப் புகைப்படங்களாலும் அலங்கரித்து இருக்கிறார்கள்.

சென்ட்ரல் ரயில் நிலைய சுவரோயியம்

சென்ட்ரல் நிலையத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும், இந்திய தேசியத் தலைவர்களின் படங்களும் நிலையத்தை வியாபித்து இருக்கின்றன. ரயிலைப் பிடிக்க அவசரமாகச் செல்லும் பயணிகள் கூட ஒரு கணம் நின்று ரசித்துவிட்டுச் செல்லுவதைக் காண முடிகிறது.

சென்ட்ரல் ரயில் நிலைய சுவரோயியம்

இந்த ஓவியங்களையும், புகைப்படங்களையும் அன்னார்ந்து பார்க்கிறவர்கள் ஒரு பிரமாண்டமான கலைக்கூடத்தின் உள்ளே நுழைந்துவிட்டது போல உணர்வார்கள் எனச் சொன்னால் அது மிகையில்லை.

சென்ட்ரல் இரயில் நிலையம்

இதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி குகநேசனிடம் பேசினோம். ``பயணிகள் பல்வேறு மனநிலையில பயணம் செய்யுறாங்க. ஏதோவொரு வகையில அவங்களுக்கு ஒரு புது அனுபவம் தரணும். அதுக்காகவே சென்ட்ரல் ரயில் நிலையங்கள்ல ஓவியங்கள் வரையலாம்னு திட்டமிட்டு, சென்னையில இருக்கிற ஓவியர்களை கூட்டிட்டு வந்து வரைய வெச்சோம்.

சென்ட்ரல் ரயில் நிலைய சுவரோயியம்

அந்த ஓவியங்கள்தான் நீங்க பாக்குறது. இதைப் பாத்துட்டு நிறைய பேரிடம் இருந்து பாராட்டு வந்துட்டு இருக்கிறது ரொம்ப ஊக்கமா இருக்கு. இதேபோல சுவரோவியங்கள்  மூர் மார்கெட் காம்ளெக்ஸிலும் வரைய இருக்கோம்.

சுவரோவியம்

அதற்கு, அடுத்ததாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிரந்தரமாக புகைப்பட அருங்காட்சியகம் அமைப்பதற்கான வேலைகள் செய்திட்டு வர்றோம்’’ என்றார்.