எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டி? - 40 ப்ளஸ் 21 தொகுதிகளுக்குப் பட்டியல் வெளியிட்ட சீமான் | Naam Tamilar Katchi announces candidates list for both the elections

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:18:21 (13/02/2019)

எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டி? - 40 ப்ளஸ் 21 தொகுதிகளுக்குப் பட்டியல் வெளியிட்ட சீமான்

நாடாளுமன்றம் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஆண், பெண் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. `தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். 20 தொகுதிகளில் ஆண்களும் 20 தொகுதிகளில் பெண்களும் போட்டியிட உள்ளனர்' என்கிறார் சீமான். 

சீமான்

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளது நாம் தமிழர் கட்சி. இதன் ஒருபகுதியாக, `தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக ஆண்களும் பெண்களும் போட்டியிடுவார்கள்' என அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதன் தொடர்ச்சியாக எந்தெந்த தொகுதிகளில் ஆண்களும் எந்தெந்த தொகுதிகளில் பெண்களும் போட்டியிடுவார்கள் என்ற பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 21 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதில் ஆண்களும் பெண்களும் தலா 11 மற்றும் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

சீமான் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பட்டியலில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளனர். 

சீமான் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்

21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், திருவாரூர், ஒட்டப்பிடாரம், ஓசூர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை, குடியாத்தம், திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.