புதுக்கோட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1600 கடல் பல்லிகள் - போலீஸார் பறிமுதல் | Sea lizards seized in Pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:10:31 (14/02/2019)

புதுக்கோட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1600 கடல் பல்லிகள் - போலீஸார் பறிமுதல்

புதுக்கோட்டை அருகே உள்ள ஜெகதாபட்டினம் கடற்கரைப் பகுதியில், வெளி நாடுகளுக்கு கடத்துவதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1600 கடல் பல்லிகளை போலீஸார் கைப்பற்றி, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடல் பல்லிகள்

ஜெகதாபட்டினம் செல்லனேந்தல் கடற்கரைப் பகுதியில் கடல் பல்லிகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, திருப்புனவாசல் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. திருப்புனவாசல் காவல் நிலைய ஆய்வாளர்  ரகுபதி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், ஜெகதாபட்டினம், செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (52) என்பவர், அரசால் தடைசெய்யப்பட்ட கடல் பல்லிகளைத் தனது வீட்டில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

பறிமுதல்

இதையடுத்து, அவரிடம் இருந்த 1600 கடல் பல்லிகளை போலீஸார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.25ஆயிரம் ஆகும். புதுக்கோட்டை வனத் துறையினரிடம் கடல் பல்லிகள் ஒப்படைக்கப்பட்டன.