ட்விட்டரில் லீக் ஆன என்.ஜி.கே படத்தின் டீசர்! | NGK movie teaser leaked in twitter

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:10:15 (14/02/2019)

ட்விட்டரில் லீக் ஆன என்.ஜி.கே படத்தின் டீசர்!

சூர்யா நடித்துள்ள புதிய  படத்தின் டீசர், வெளியாவதற்கு முன்பாகவே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சூர்யா சேர்ந்து நடித்துள்ள படம்,  'என்.ஜி.கே' என்கிற 'நந்த கோபாலன் குமாரன்'. இவர்கள் மூவருடைய கூட்டணியே சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது.

டீசர்

 இந்தப் படத்தின் டீசர், காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. ஆனால், அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்பாகவே, (பிப்ரவரி 13-ம் தேதி) 'என்.ஜி.கே' படத்தின் டீசர்  ட்விட்டரில்  லீக் ஆகியுள்ளது.

இதுகுறித்து என்.ஜி.கே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டரில், “ திட்டமிட்டது போலவே என்.ஜி.கே படத்தின் டீசர், 2கே தரத்தில் பிப்ரவரி  14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.