`தலைமைதான் முடிவு சொல்ல வேண்டும்' - நாடாளுமன்றத் தேர்தல்குறித்து கனிமொழி! | admk will lose election says kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (14/02/2019)

கடைசி தொடர்பு:11:09 (14/02/2019)

`தலைமைதான் முடிவு சொல்ல வேண்டும்' - நாடாளுமன்றத் தேர்தல்குறித்து கனிமொழி!

'கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அ.தி.மு.க தோல்வி அடையும்' என தி.மு.க எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.

கனிமொழி

கடந்த 8-ம் தேதி, இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஒரு வாரமாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்றைய கூட்டத்தில் நடந்த விவாதம் விறுவிறுப்பாக இருந்தது. இதில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, ’'வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட அ.தி.மு.க தயாரா'’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், ``அ.தி.மு.க தனித்துப் போட்டியிடத் தயாராக உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், நாங்களும் தயார்’' என்று கூறினார். 

கனிமொழி

இந்நிலையில், நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி. அப்போது, அ.தி.மு.க கூட்டணிகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கனிமொழி, ``அ.தி.மு.க,  கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் தோல்வியைத்தான் சந்திக்கும். தனித்துப் போட்டியிட்டாலும் மக்கள் அவர்களைத் தோற்கடிக்கப்போகிறார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. திராவிட இயக்கம் இல்லாத தமிழகம் இருக்க முடியாது. ஆனால், அ.தி.மு.க-வை திராவிட இயக்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டோமா என்பதுதான் இப்போதைய கேள்வி" என்றார். மேலும், ``நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடுவது பற்றி தி.மு.க தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க