சீரியல் நடிகை யாஷிகா தற்கொலை! - பெற்றோர் வேதனை | actress yashika attempts suicide in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:12:16 (14/02/2019)

சீரியல் நடிகை யாஷிகா தற்கொலை! - பெற்றோர் வேதனை

சீரியல் நடிகை யாஷிகா சென்னையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட யாஷிகா

'மன்னர் வகையறா' படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா (வயது 21). துணை நடிகையான இவர், திருப்பூரைச் சேர்ந்தவர். மேரிஷீலா ஜெபராணி என்பது இவரின் சொந்தப் பெயர். வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துவந்தார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். யாஷிகாவுக்கும் பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பெரவள்ளூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து,  திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும்  வாழ்ந்துவந்தனர்.  சில நாள்களுக்கு முன், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த அரவிந்த், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால், யாஷிகா வேதனை அடைந்தார். நேற்று முன்தினம், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரவள்ளூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

நடிகை யாஷிகா தற்கொலைகுறித்து பெரவள்ளூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க