`தினமும் பேசுறேன்; எந்தப் பிரச்னையும் இல்லை' - தம்பிதுரை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்! | pon radhakrishanan speak about thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (14/02/2019)

கடைசி தொடர்பு:15:10 (14/02/2019)

`தினமும் பேசுறேன்; எந்தப் பிரச்னையும் இல்லை' - தம்பிதுரை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்!

பொன் ராதாகிருஷ்ணன்

``தம்பிதுரை என் நெருங்கிய சகோதரர். தினமும் அவருடன் பேசி வருகிறேன். கூட்டணி தொடர்பாக பா.ஜ.கவுக்கு யாரோடும் எந்தப் பிரச்னையும் கிடையாது" எனக் கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா தேர்தலுக்கானது. தேர்தல் வரும்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறும். சீசனுக்கு வளத்தைத் தேடி வரும் ஆஸ்திரேலிய பறவைகள்போல தேர்தலுக்காக, நாராயணசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். அமித் ஷாவின் வருகை இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.  

தம்பிதுரை

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெறும். தே.மு.தி.கவுடன் கூட்டணி வைக்கப் பல கட்சிகள் காலில் விழுகிறார்கள் என்று விஜயபிரபாகரன் பேசியுள்ளார். அப்படி யாரேனும் காலில் விழுந்தால் விழுந்தவர்களால் பலமான கூட்டணி அமைக்க முடியாது. ஒரு தூணுடன் இன்னொரு தூண் நின்றால்தான் பலம். விழுந்தால் பலம் இல்லை" என்றவர், பா.ஜ.கவிற்கு எதிராக தம்பிதுரையின் தொடர் விமர்சனங்கள் குறித்து கேட்டதற்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ``தம்பிதுரை என் நெருங்கிய சகோதரர், தினமும் அவருடன் பேசி வருகிறேன். கூட்டணி தொடர்பாக பா.ஜ.கவுக்கு யாரோடும் எந்தப் பிரச்னையும் கிடையாது" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க