`ஊழலைக் காதலிக்காமல் மக்களைக் காதலியுங்கள்' - புதிய முயற்சியில் அறப்போர் இயக்கம்! | aṟappōr iyakkam starts My proposal movement against Chennai Corporation on Valentines day

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (14/02/2019)

கடைசி தொடர்பு:15:50 (14/02/2019)

`ஊழலைக் காதலிக்காமல் மக்களைக் காதலியுங்கள்' - புதிய முயற்சியில் அறப்போர் இயக்கம்!

 அறப்போர்

'ஊழலைக் காதலிக்காமல் மக்களைக் காதலியுங்கள்' என சென்னை மாநகராட்சிக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது . 

இன்று, உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. காதலர் தினத்தையொட்டி பொதுமக்களிடம் சென்னை மாநகராட்சியின் ஊழல்குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த, அறப்போர் இயக்கம் புதிய முயற்சியாக, அதற்கென வாட்ஸ்அப் கார்டு ஒன்றைத் தயாரித்துள்ளது. அதில், 'மக்கள் உங்களிடம் நெருங்கி வர வேண்டும் என்றால் முறைகேடாகப் போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்யுங்கள். டெண்டர்களில் முறைகேடு செய்த கான்ட்ராக்டர்களைத் தடைசெய்யுங்கள். முறைகேடுகளுக்குத் துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள். செட்டிங் செய்யாத நேர்மையான இ-டெண்டர் முறையைத் தொடங்குங்கள். ஊழலைக் காதலிக்காமல் மக்களைக் காதலியுங்கள்" உள்ளிட்ட வாசகங்களுடன் வாட்ஸ்அப் கார்டு தயார்செய்து, அதைப் பொதுமக்களிடையே பகிர்ந்து வருகின்றனர். 

சென்னை மாநகராட்சி

இதுகுறித்துப் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "மக்களிடம் விழிப்பு ஏற்படுத்தவே ``My proposal to Chennai Corporation on Valentines day'' என்ற புதிய முயற்சியை மேற்கொண்டோம். சென்னை மாநராட்சியின் ஊழல் புகார்குறித்து சென்னை மாநகராட்சியின் ஆணையர் கார்த்திகேயனிடம் தொலைபேசியில் தெரிவிக்க, அவருடைய போன் நம்பரையும் அந்த வாட்ஸ்அப் கார்டில் பதிவிட்டுள்ளோம் " என்றார்.