`உயரதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கட்டாயம்! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras hight court orders to set cctv camers in office rooms

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (14/02/2019)

கடைசி தொடர்பு:16:10 (14/02/2019)

`உயரதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கட்டாயம்! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பணிக்குச்செல்லும் பெண்கள் தங்களின் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்கும் நோக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், ``பணிசெய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அவசியமாகும். எனவே, அனைத்துத் துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். 2 வாரங்களுக்குள் அதைச் செய்துமுடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். ``வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில், எனது அறையிலும் 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்துங்கள்” என்றும், உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்களை சி.பி..சிஐ.டி தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி சுப்ரமணியன்.