`தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது!’ - பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் நீதிமன்றம் | Madurai HC bench appreciates TN government over Plastic ban

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (14/02/2019)

கடைசி தொடர்பு:18:10 (14/02/2019)

`தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது!’ - பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் நீதிமன்றம்

தமிழக அரசு பிளாஸ்டிக்குக்குத் தடை விதித்ததற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டுகள் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் தடை

அணு ஆயுதங்களைவிட உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பது பிளாஸ்டிக் கழிவுகள்தான். மக்களின் அன்றாட வாழ்விலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறி வருகிறது. நாம் தினமும் தூக்கியெறியும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பல முயற்சி செய்துவருகின்றனர். தமிழகத்தில் அரசாணை ஆணை வெளிடப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாகக் குறைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் மனு ஒன்றை அளித்தார் அதில், ``அரசாணை 84-ல் பிளாஸ்டிக் பைகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இதுதொடர்பாக நடவடிக்கை கோரியும் எவ்வித பயனுமில்லை. ஆகவே, பிளாஸ்டிக்குகளை முழுமையாகத் தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை பெற தமிழக அரசுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிளாஸ்டிக்கை தடை செய்ய தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதுபோல குழு அமைத்தால், அது பிளாஸ்டி தடையைத் தாமதப்படுத்தும் எனத் தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழகத் தலைமைச் செயலரை சேர்த்திருப்பது தேவையற்றது. ஆகவே, அவரை இந்த வழக்கிலிருந்து நீக்குவதாக உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக கருத்து அறியும் விதமாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


[X] Close

[X] Close