ஜெயலலிதா பயோபிக்கில் சசிகலாவாக விஜி சந்திரசேகர்!  | Viji Chandrasekar acts as Sasikala in Jayalaitha's Bio-pic

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (14/02/2019)

ஜெயலலிதா பயோபிக்கில் சசிகலாவாக விஜி சந்திரசேகர்! 

இந்திய சினிமாவில் தலைவர்களின் வாழ்க்கை  வரலாற்றைக் கொண்ட பயோபிக் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. அதேபோல், விளையாட்டு வீரர்களின் பயோபிக்குகளும் படமாகி வருகின்றன. அந்தவகையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

விஜி சந்திரசேகர்

பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் ஜெயலலிதாவின் பயோபிக்கை ஒரே சமயத்தில் இயக்கி வருகின்றனர். மேலும், கெளதம் மேனன் ஜெயலலிதா பயோபிக்கை வெப்-சீரீஸாக இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார். மேலும், பிரியதர்ஷினி இயக்கிவரும் பயோபிக்கில் நித்யா மேனனும், லிங்குசாமி படத்தில் நயன்தாராவும் ஜெயலலிதாவாக நடிக்கின்றனர். 

கெளதம் மேனன் இயக்கும் வெப்- சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க, சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தவிர, இப்படத்தில், வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்-சீரீஸ் விரைவில் இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


[X] Close

[X] Close