தம்பிதுரை தொகுதியைக் குறிவைக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை! | minister vijayabaskar's father asks thambidura's karur constituency

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (14/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (14/02/2019)

தம்பிதுரை தொகுதியைக் குறிவைக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை!

2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைந்தது. மொத்தம் 1,737 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் தம்பிதுரையின் கரூர் தொகுதியைக் குறிவைத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை விருப்பமனு அளித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

அ.தி.மு.க விருப்ப மனு

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகத்தை, கடந்த பிப்ரவரி 4-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிப்ரவரி 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்த கால அவகாசம், 14-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.

தம்பிதுரை

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட 4500-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இம்முறை மூன்றில் ஒரு பகுதியே பெறப்பட்டுள்ளன. அதுவும், பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னரே விருப்பமனு அளிப்பது அதிகரித்தது. 

அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சின்னதம்பிவிருப்பமனு அளித்துள்ளவர்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்தை தொடர்ந்து, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஜெயக்குமாரின் வாரிசுகளும் விருப்பமனு அளித்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன், அமைச்சர்கள் தங்கமணியின் சம்பந்தி, வீரமணியின் உறவினர், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் என்று சீட் கேட்டு விருப்பமனு அளித்துள்ள வாரிசுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனின் சார்பாகவும் சிலர் விருப்பமனு பெற்றுள்ளனர்.

விருப்பமனு அளிக்க கடைசி நாளான இன்று, கரூர் தொகுதியில் போட்டியிட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்பமனு அளித்துள்ளார். அத்தொகுதியின் எம்.பியாக உள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வுக்கு எதிராக பேசிவரும் நிலையில், அவரது தொகுதியைக் குறிவைத்து முக்கிய அமைச்சரின் தந்தை ஒருவர் விருப்பமனு அளித்திருப்பது அ.தி.மு.க.வுக்குள் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. 


[X] Close

[X] Close