`அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு!’ - சேலத்தில் உண்ணாவிரதம் | 60% reservation in employment for children from government school, urges salem activist

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (14/02/2019)

`அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு!’ - சேலத்தில் உண்ணாவிரதம்

பள்ளி

அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே சரணாலயம் அமைப்பைச் சேர்ந்த சுரேந்திரன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அமர்ந்திருந்தார். இந்த உண்ணாவிரதத்துக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கியது. பொதுமக்களின் கவனத்துக்குச் செல்லும் விதமாகத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

சுரேந்திரன்உண்ணாவிரதத்தில் அமர்ந்திருந்த சுரேந்திரனிடம் பேசினோம். ``அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளைக் கட்டாயம் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய கல்விச் சட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே தமிழக அரசு கொண்டுவர வேண்டும். சாதி இட ஒதுக்கீடு, பொருளாதார இட ஒதுக்கீடு போல அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 60% இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.78,266 கோடி மக்களின் வரிப்பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 3,500 அங்கன்வாடிகள், 5,000 அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. பல அரசுப் பள்ளிகளில் வகுப்பறைக்கு ஒரு மாணவன் கூட இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. அடிமைக் கல்வி முறையாக இந்திய கல்வி முறையை உருவாக்கிய மெக்காலாவே ஒப்புக்கொண்ட பிறகும் 180 வருடங்களாக அவர் உருவாக்கிய முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

தேர்வு முறையை உருவாக்கிய பெட்ரிக், ஜே.கெல்லி, மனிதத்தன்மையற்ற தேர்வுமுறை எனக்கூறிய பிறகும் அதைப் பின்பற்றுவது ஏன். சுயசார்பு வாழ்வியல், சுற்றுச்சூழல், தனிமனித ஒழுக்கம் என்ற எதையும் கற்றுத்தராத கல்வி முறையாகவே இருக்கிறது. உலகில் தலைசிறந்த கல்வி முறையான பின்லாந்து நாட்டில் அரசுப் பள்ளிகள் மட்டுமே உள்ளதைப் போல இந்தியாவிலும் உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மக்களிடம் அரசு வேலை வேண்டும். அரசுப் பள்ளி வேண்டாம் என்ற சிந்தனையை ஒழிக்க வேண்டும்'' என்றார்.


[X] Close

[X] Close