தேசிய அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய திருச்சி போலீஸார்! | Tamilnadu police officers won medals at national athletics competitions

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (14/02/2019)

கடைசி தொடர்பு:20:10 (14/02/2019)

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய திருச்சி போலீஸார்!

காவல்துறைக்குள் நடந்த அகில இந்தியப் போட்டிகளில் திருச்சி மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றுள்ளனர்.

மயில்வாகனன்

40-வது அகில இந்திய மூத்த விளையாட்டு வீரர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் 4,000 வீரர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும், அந்தந்த மாநிலங்களில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் அகில இந்தியப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காகக் கடந்த சிலவாரங்களுக்கு முன்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தமிழக அளவிலான போட்டிகளில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் வெற்றிபெற்ற 25 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேசிய அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்றனர். 

தேசிய அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை 14 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 28 பதக்கங்களைப் பெற்றது. குறிப்பாகத் தமிழ்நாடு அணி, ஆண்கள், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது.

திருச்சி போலீஸார்

இவ்விளையாட்டுப் போட்டிகளில் 40 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தடகள விளையாட்டுப்போட்டியில் திருச்சி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் மயில்வாகனன் 4 X 100 தொடர் ஓட்டப்பந்தயம் மற்றும்  4 X 400 தொடர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளார். அகில இந்திய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்ற திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனனை, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close