ஊத்தங்கரையில் தனியார் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து - 4பேர் படுகாயம் | Private Bus accident in krishnagiri

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:02:00 (15/02/2019)

ஊத்தங்கரையில் தனியார் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து - 4பேர் படுகாயம்

ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி ஏரியில்  தனியார் பேருந்து, நிலை தடுமாறி ஏரியில் கவிழ்ந்ததால் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் 10பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பேருந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரையில் நேற்று காலை 7 மணி அளவில் அரூரிலிருந்து ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த கே.ஏ.எஸ் என்ற தனியார் பேருந்தை ஓட்டுநர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திப்பம்பட்டி ஏரி வளைவில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை வளைத்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 3 பள்ளி மாணவிகள் உள்படப் 10 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவி கௌசல்யா மட்டும் பலமான காயம் என்பதால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


[X] Close

[X] Close