காவல்துறையினருக்கு எதிராக திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்கள் போராட்டம் | reporters Protest against police in srivillliputhur

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:05:00 (15/02/2019)

காவல்துறையினருக்கு எதிராக திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்கள் போராட்டம்

திருவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர்கள்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் நேற்று திருவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுக்கவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினரின் தாக்குதலில் செய்தியாளர் மணிகண்டன் என்பவருக்கு கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் இந்த செயலை கண்டித்து திருவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள் சார்பில் திருவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மக்களவை தொகுதி உறுப்பினர் அழகிரிசாமி பேசும்போது, பிரச்னைகளை வெளிக்கொண்டு வருபவை ஊடகம் தான். ஆனால் இன்று ஊடகத்துறையினரே தாக்கப்பட்டுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை யாருக்காக அழைத்தார்? அந்த தகவல் ஏன் வெளியே தெரிவிக்கப்படவில்லை. செய்தியாளரை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழர் கட்சியினர், வழக்கறிஞர்கள் மற்றும் செய்தியாளர்கள் என இந்த போராட்டத்தில் பங்கேற்றோர், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட பொருட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close