‘எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் இரவில் நடந்த சந்திப்பு!’ - கூட்டணி பேச்சு வார்த்தையா? | N.rangasamy met tamilnadu cm palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 01:06 (15/02/2019)

கடைசி தொடர்பு:01:06 (15/02/2019)

‘எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் இரவில் நடந்த சந்திப்பு!’ - கூட்டணி பேச்சு வார்த்தையா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில். இந்தியா முழுவதும் தேர்தல் கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமி நேற்று இரவு 9.30 மணி அளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளார்.

என்.இரங்கசாமி கூட்டணி பேச்சு வார்த்தை

பாண்டிச்சேரியில் கங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணியிலான அரசு ஆட்சி செய்து வருகின்றது . பாண்டிச்சேரி முதல்வர் நாரயணசாமி ஏற்கெனவே அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகத் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்.  தமிழக முதல்வருடனான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தானது என்று என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சொல்லப்பட்டாலும். ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தில் நடந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு நிகழ்வில் இராகுல் காந்தியைப் பிரதமராக முன் மொழிந்து தி.மு.கவும் காங்கிரஸும் தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ளன. தற்போது  பாண்டிச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள என்.ஆர் காங்கிரஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி  குறித்தான பேச்சு வார்த்தைக்கு இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


[X] Close

[X] Close