‘நள்ளிரவில் நீடித்த பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை!’ - அ.தி.மு.க நிலைப்பாடு என்ன? | Piyus goel met minister thanagamani

வெளியிடப்பட்ட நேரம்: 01:52 (15/02/2019)

கடைசி தொடர்பு:08:49 (15/02/2019)

‘நள்ளிரவில் நீடித்த பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை!’ - அ.தி.மு.க நிலைப்பாடு என்ன?

பி.ஜே.பி-யின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக, பியூஸ் கோயலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள நிலையில். நாடாளுமன்றத் தேர்தலின் கூட்டணிகுறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக, பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராகத் தன்னை அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதா என்னை ஒரு சகோதரராகப் பாவித்தார். கூட்டணிகுறித்த முடிவுகள் பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு தெரியவரும். அரசியலில் எதுவும் நடக்கலாம்” எனக் கூறியிருந்தார்.

பியூஸ் கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை

பியூஸ் கோயல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிய நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில்  உள்ள பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியும் சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகுறித்து ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழக பி.ஜே.பி-யின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில்,பியூஸ் கோயல் அங்கிருந்து புறப்பட்டார்.

 


[X] Close

[X] Close