மீண்டும் மயக்க ஊசி: கும்கி கலீம் உதவியுடன் சுற்றிவளைக்கப்பட்ட சின்னத்தம்பி! | Forest Department again trying to capture Chinnathambi elephant

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (15/02/2019)

கடைசி தொடர்பு:10:20 (15/02/2019)

மீண்டும் மயக்க ஊசி: கும்கி கலீம் உதவியுடன் சுற்றிவளைக்கப்பட்ட சின்னத்தம்பி!

சின்னத்தம்பி யானையைப் பிடிக்க  மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

சின்னத்தம்பி

கோவையில் இருந்து டாப் ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, தனது வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வனப்பகுதியிலிருந்து வெளியில் வந்தது. இதையடுத்து, விளை நிலங்களுக்கு சேதம் ஏற்படுத்துவதால், சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.  இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதையடுத்து, சின்னத்தம்பி யானையைப் பிடித்து வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.   

இதைத் தொடர்ந்து,நேற்று முதல் சின்னத்தம்பி  யானையைப் பிடிக்கும் பணி தொடங்கியது. ட்ரோன் கேமாரவை வைத்து யானையைக் கண்காணிப்பது, பாதை ஏற்படுத்துவது போன்ற பணிகள் நடந்துவந்தன. இன்று அதிகாலை, சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி போடுவதற்கு வனத்துறை முயற்சி செய்தது. ஆனால், சின்னத்தம்பி யானை கரும்புக் காட்டுக்குள் சென்றுவிட்டது. இதனால்,  நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, கும்கி யானை கலீமின் உதவியுடன் சின்னத்தம்பி வெளியில் வரவழைக்கப்பட்டது. 

சின்னத்தம்பி

மருத்துவர் அசோகன் செலுத்திய முதல் ஊசி குறி தவறியது. பின்னர், வன ஆலோசகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் செலுத்திய இரண்டாவது ஊசி, அதன் கால் பகுதியில் செலுத்தப்பட்டது. அதேபோல மூன்றாவது முறை மீண்டும் மருத்துவர் அசோகன் செலுத்திய ஊசி குறி தவறிப்போனது. நான்காவது முறையாக தங்கராஜ் பன்னீர் செல்வம் முயன்றும் பயனில்லை.  இப்படியான பலமுயற்சிகளுக்குப்பின், சின்னத்தம்பி,  மீண்டும் கரும்புக் காட்டுக்குள் சென்றுவிட்டது. 

இதையடுத்து கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னதம்பியை பலாப்பழத்தின் வாசனையைக் கொண்டு வெளியே வர வைத்தனர். பின்னர் ஐந்தாவது முறையாக சின்னதம்பிக்கு மயக்க ஊசி செலுத்தபட்டது.


[X] Close

[X] Close