`கூட்டணி ஏன் தேவைப்படுகிறது?'- ஹெச்.ராஜா | H.raja spoke about election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (15/02/2019)

கடைசி தொடர்பு:12:16 (15/02/2019)

`கூட்டணி ஏன் தேவைப்படுகிறது?'- ஹெச்.ராஜா

ஹெச் ராஜா

``எதிர்க்கட்சி கூட்டணி என்பது ஊழல் செய்த பொறுப்பற்றவர்களின் கூட்டணியாக இருக்கிறது. இந்தக் கூட்டணியைக் கூட்டி அப்புறப்படுத்த கூட்டணி தேவைப்படுகிறது'' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கோவையில் தெரிவித்துள்ளார்.

1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, `கும்பகோணத்தில் மதமாற்றும் சக்திகளைத் தட்டி கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றவர்,

பா.ஜ.க கூட்டணியை கட்சி தலைமையே முடிவு செய்யும். பாண்டிச்சேரி கைவிட்டுப் போவது உறுதி எனத் தெரிந்ததால் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்துகிறார். தி.மு.கவை ஸ்டாலின் வழிநடத்தவில்லை. சுயமாகச் சிந்தித்து கட்சியை வழி நடத்த தெரியாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். எதிர்க்கட்சி கூட்டணி என்பது ஊழல் செய்த பொறுப்பற்றவர்களின் கூட்டணியாக இருக்கிறது. இந்தக் கூட்டணியைக் கூட்டி அப்புறப்படுத்த கூட்டணி தேவைப்படுகிறது'' என்றார்.

இறுதியாக காவல்துறை அனுமதியின்றி அஞ்சலி செலுத்திய ஹெச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close