இரண்டாயிரத்தை எதிர்த்து கோர்ட்டுக்குப் போவீங்களா?- மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி | Minister RB Udhayakumar's controversy speech in madurai

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (15/02/2019)

இரண்டாயிரத்தை எதிர்த்து கோர்ட்டுக்குப் போவீங்களா?- மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

``அரசு வழங்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரண நிதியை எதிர்த்து ஸ்டாலின் கோர்ட்டுக்குச் சென்றால், ஓட்டு கேட்டு தி.மு.க-வினர் வீதிக்கு வர முடியாது" என்று தி.மு.க-வை கடுமையாக எதிர்த்துப் பேசினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

ஆர் பி உதயகுமார்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மண்டல அளவில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மதுரை ரிங் ரோட்டிலுள்ள தனியார் அரங்கத்தில் நடந்தது.

இதில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. பொங்கலுக்கு இரண்டு கோடிக்கும் மேலான மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்தார் எடப்பாடி. அதேபோல் இப்போது 60 லட்சம் ஏழை மக்களுக்கு இரண்டாயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தி.மு.க.வினர் தானும் ஏழைகளுக்கு உதவ மாட்டார்கள். அடுத்தவரையும் கொடுக்கவிட மாட்டார்கள்.

பொதுவாக சொம்பை கொடுத்துவிட்டு அண்டாவை திருடிச் செல்பவர்கள் தி.மு.க-வினர். ஆனால், அ.தி.மு.க நிர்வாகிகளோ கட்டிய வேட்டியை கேட்டால் கூட கழட்டிக் கொடுத்து விடுவார்கள். அந்தளவுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். முதலமைச்சர் எடப்பாடி தாயுள்ளத்தோடு கொடுக்கும் 2,000 ரூபாய்க்கு எதிராக ஸ்டாலின் கோர்ட்டுக்குச் சென்றால் மக்களிடம் ஓட்டு கேட்டு வரமுடியாது. மக்கள் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close