சென்னை ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கு இந்திய அளவில் தொடரும் வரவேற்பு! - அப்படி என்ன செய்தார்? | Chennai Auto Driver Annadurai becomes popular over his service

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:16:39 (15/02/2019)

சென்னை ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கு இந்திய அளவில் தொடரும் வரவேற்பு! - அப்படி என்ன செய்தார்?

சென்னையைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை. தன்னுடைய ஆட்டோவில்  இலவச வை-பை, நாளிதழ்கள், வார இதழ்கள், டிவி, என பயணிகளைக் கவர பல வசதிகளை வைத்திருக்கிறார். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஸ்வைப்பிங் மிஷன். அன்னையர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய தினங்களின்போது தள்ளுபடி விலையில் சவாரி என ஆச்சர்யங்களை சுமந்துகொண்டு ஐந்தாண்டுகளுக்கும் மேல் பயணிக்கிறது அண்ணாதுரையின் ஆட்டோ.

ஆட்டோ ட்ரைவர் அண்ணாதுரை

வாடிக்கையாளர்களை எப்படித் தன்வயப்படுத்துவது அவர்களுக்கு எப்படி நம்பகத்தன்மை ஏற்படுத்துவது, தன்னிடம் எப்படித் தேடிவரவைக்க முடியும் என அண்ணாதுரை நிகழ்த்தி காட்டினார். சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அவரது ஆட்டோவில் சவாரி செய்யக் காத்திருந்தனர் பயணிகள். அண்ணாதுரை பிரபலமானார். வாடிக்கையாளரைக் கவர்வது எப்படியென இந்திய அளவில் பல மேடைகளில் பேச அண்ணாதுரைக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆட்டோ ட்ரைவர் அண்ணாதுரை

அதன் தொடர்ச்சியாக, இந்த வருடம் மொஹாலியில் நடக்கும் இந்தியன் 'ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ்' என்கிற அமைப்பு நடத்துகிற கூட்டத்தில் அண்ணாதுரை பங்கேற்க இருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்புப் படிப்பை பாதியில் நிறுத்தி ஆட்டோ ஒட்டிய அண்ணாதுரை இன்று இந்திய அளவில் பெரிய பெரிய வியாபார காந்தங்களுக்கு இடையே பேச ஆரம்பித்திருக்கிறார். படிப்பும் வேலையும் இரண்டாம்பட்சம்தான். ஈடுபடுகிற வேலையை அர்ப்பணிப்புடன் செய்தால் வெகுமதிகள் தேடிவரும் என்பதற்கு ஆகச்சிறந்த இன்னுமோர் உதாரணம் ஆட்டோ அண்ணாதுரை. 


[X] Close

[X] Close