தென்சென்னை தமிழிசை; கோவை யாருக்கு? - பா.ஜ.க-வில் தொடங்கிய தொகுதிப் பங்கீடு மோதல் | Seats clash in TN BJP regarding Parliament election 

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (15/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (15/02/2019)

தென்சென்னை தமிழிசை; கோவை யாருக்கு? - பா.ஜ.க-வில் தொடங்கிய தொகுதிப் பங்கீடு மோதல்

தென்சென்னை அல்லது திருப்பூர் என்பதுதான் தமிழிசையின் விருப்பமாக இருக்கிறது. கடந்த தேர்தல்களில் வடசென்னையைத் தேர்வு செய்து அவர் போட்டியிட்டார். இந்த முறை அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

தென்சென்னை தமிழிசை; கோவை யாருக்கு? - பா.ஜ.க-வில் தொடங்கிய தொகுதிப் பங்கீடு மோதல்

த்திய அமைச்சர் பியூஷ் கோயலின் வருகையால் உற்சாகத்தில் உள்ளனர் தமிழக பா.ஜ.க தலைவர்கள். `நாடாளுமன்றத் தொகுதியில் யார் யாரெல்லாம் போட்டியிடப்போகிறார்கள் என்பது இறுதி வடிவத்துக்கு வந்துவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள். 

எடப்பாடி, தமிழிசை, பியூஷ் கோயல்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்கு நேற்று வந்திருந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அங்கு தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் சென்றிருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம், ``பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள், எந்தெந்த இடங்கள் என்பன உறுதியாகிவிட்டது’’ எனத் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பேசத் தொடங்கியுள்ளனர். கூட்டணி குறித்துப் பேசிய டாக்டர் தமிழிசை, ``மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நாட்டை பாதுகாக்க முடியும். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். இனிப்பான செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது’’ எனப் பேட்டியளித்தார். 

வானதி சீனிவாசன்

``தமிழக பா.ஜ.க தலைவர்களில் யாரெல்லாம் போட்டியிடப்போகிறார்கள்?’’ என்பது குறித்துப் பேசும் பா.ஜ.க நிர்வாகிகள், ``தமிழிசை, வானதி, பொன்னார், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் தேர்தல் களத்தில் போட்டியிட உள்ளனர். தொடக்கத்தில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தார் டாக்டர் தமிழிசை. அந்தத் தொகுதியில் 10 சதவிகித நாடார் சமூக மக்கள் இருப்பதால், அந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். தற்போது தென்சென்னையில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார். தென்சென்னை அல்லது திருப்பூர் என்பதுதான் தமிழிசையின் விருப்பமாக இருக்கிறது. கடந்த தேர்தல்களில் வடசென்னையைத் தேர்வு செய்து அவர் போட்டியிட்டார். இந்த முறை அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இந்த முறை இல.கணேசன் போட்டியிடப் போவதில்லை. கோவை நாடாளுமன்றத் தொகுதியை எதிர்பார்த்து வானதியும் சி.பி.ராதாகிருஷ்ணனும் காத்திருக்கின்றனர். 

பொன்.ராதாகிருஷ்ணன்

ஏற்கெனவே, 2 முறை கோவை தொகுதியின் எம்.பி-யாக இருந்தவர் சி.பி.ஆர். தற்போது மத்திய கயிறு வாரியத் தலைவராகவும் இருக்கிறார். `திருப்பூர் தொகுதியை வானதிக்குக் கொடுக்கலாம்' எனவும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கோவை தொகுதியில் ஏராளமான நலத்திட்டப் பணிகளைச் செய்து வருவதால், கோவை தொகுதியைத் தனக்கு ஒதுக்குவார்கள் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் வானதி. இதே தொகுதியில் போட்டியிட மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் வழக்கம்போல, பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார். பா.ஜ.க-வோடு இணைந்து செயல்பட்டும் வரும் புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளுக்குத் தன்னுடைய பங்கீட்டில் இருந்து பா.ஜ.க இடங்களை ஒதுக்க இருக்கிறது. அ.தி.மு.க-வில் 8 இடங்கள் வரையில் ஒதுக்கப்பட இருப்பதால், அதில் இருந்து 3 தொகுதிகளை மேற்கண்ட கட்சிகளுக்கு ஒதுக்க இருக்கிறார் தமிழிசை" என்கின்றனர் விரிவாக. 


[X] Close

[X] Close