``வசதியானவங்க மட்டுந்தான் படிக்கணுமா"!- தேர்வுக் கட்டண உயர்வு குறித்து மாணவர்கள் கேள்வி | Madras University increased exam fees

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (15/02/2019)

``வசதியானவங்க மட்டுந்தான் படிக்கணுமா"!- தேர்வுக் கட்டண உயர்வு குறித்து மாணவர்கள் கேள்வி

மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது சென்னைப் பல்கலைக் கழகம். ஒரு பாடம் எழுதுவதற்கு தற்போது உள்ள 100 ரூபாய் கட்டணத்திலிருந்து 150 ரூபாயாக முதுகலை படிப்புக்கும், 65 ரூபாயிலிருந்து 85 ரூபாய் என இளங்கலை படிப்புக்கும் உயர்த்தி இருக்கிறார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 110 கல்லூரிக்கும் இந்தத் தேர்வுக் கட்டணம் அமலுக்கு வருகிறது. இதை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது உள்ளிருப்புப் போராட்டம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

சென்னை பல்கலைக் கழகம் கட்டண உயர்வு

அங்குள்ள மாணவர் ஒருவருடன் இதுகுறித்துப் பேசுகையில், ``பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகிற பல கல்லூரிகள்ல தேர்வுச் சமயத்தின்போது தேர்வு எழுத தாள்கள்கூட தர்றது இல்லை. ஆனா, தேர்வுக் கட்டணத்தை மட்டும் ஏத்தி இருக்காங்க. முன்னாடி இருந்ததைவிட 30 சதவிகிதம் அதிகம். பழைய படியே மாறணும். இந்தக் கட்டண அதிகரிப்பை ஏத்துக்க முடியாது.  இப்போ, இதுக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிக்கலைன்னா போகப்போக மற்ற கட்டணங்களையும் ஏத்திடுவாங்க.

சென்னைப் பல்கலைக்கழகம்

எங்கயோ ஒரு சின்ன கிராமத்துல இருந்து வர்ற மாணவ மாணவியர்களும் வந்து படிக்கக்கூடிய ஒரு பல்கலைக்கழகம்தான் சென்னைப் பல்கலைக்கழகம். ஆனா, தேர்வுக்கட்டணம் ஏத்தி இருக்கிறதப் பார்த்தா இனி இங்கயும் வசதியானவங்க மட்டுந்தான் படிக்க முடியும் போல இருக்கு" என்றார்.


[X] Close

[X] Close