`ஏழுபேரை விடுலை செய்; சட்டமன்ற தீர்மானத்துக்கு உயிர் கொடு!'- திருமணத்தில் ஒலித்த முழக்கம் | marriage couple Raised voice about pre release of Rajiv murder case convicts

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (15/02/2019)

`ஏழுபேரை விடுலை செய்; சட்டமன்ற தீர்மானத்துக்கு உயிர் கொடு!'- திருமணத்தில் ஒலித்த முழக்கம்

ஏழுபேரை விடுதலைசெய்ய  கோரிக்கை

மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த இரா.மணிவண்ணன் - பா.வினோதினி மணமக்கள் திருமணத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மணமக்கள் இருவரும் கையில் ஏந்தி நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த இரா.மணிவண்ணன் -பா.வினோதினிக்கும் திண்டுக்கல்லில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மையமாக வைத்து சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். குறிப்பாக தண்டனைப் பெற்றுவரும் ஏழுபேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மணமக்கள் இரா. மணிவண்ணன்- பா.வினோதினி ஆகிய இருவரும் 7 நிரபராதி தமிழர்களை விடுலை செய்; சட்டமன்ற தீர்மானத்துக்கு உயிர் கொடு" என்ற பதாகைகளை ஏந்தி நின்றனர்.

இரா.மணிவண்ணன் -பா.வினோதினி    மணமக்கள்

அதோடு இந்தக் கொலைக் குற்றத்தில் தொடர்பில்லாத அந்த ஏழு நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மணமக்களின் இந்தச் செயல் திருமணத்துக்கு வந்தவர்களை ஈர்க்கச் செய்தது. இந்த மணமக்களை வாழ்த்த வருகை தந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்களும் மேற்கூறிய பதாகைகளையும், குறிப்பிட்ட ஏழு சிறைவாசிகளின் புகைப்படத்தையும் ஏந்தியிருந்தனர். தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் நீண்ட நாள்களாக ஏழு தமிழரை விடுவிக்க பல்வேறு போராட்டங்களின் வாயிலாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளிலும் ஏழு தமிழரை விடுவிக்கும் கோரிக்கை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 


[X] Close

[X] Close