`விருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவியுங்கள்!’ - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அதிர்ந்த விவசாயிகள் | To announce Virudhunagar as Drought hit district, Farmers staged protest

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (15/02/2019)

கடைசி தொடர்பு:20:40 (15/02/2019)

`விருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவியுங்கள்!’ - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அதிர்ந்த விவசாயிகள்

விருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள்

விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். 2017-18-ம் ஆண்டுக்கான அனைத்து வகை பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் அனைவரின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச்செயலர் எஸ்.மனோஜ்குமார் தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றோர் கூறும்போது, நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும். வெங்காய விவசாயிகளுக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும். பயறு வகைகளுக்கும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close