புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்! | Actress Kasthoori's statement on pulwama terror attack

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (15/02/2019)

கடைசி தொடர்பு:19:05 (15/02/2019)

புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும்போது ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 44 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். நேற்று அதிகாலை இந்தத் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய மக்களும், அரசியல் தலைவர்களும் தங்களது அஞ்சலிக் குறிப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தபடி இருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி இதுகுறித்து நம்மிடம் பேசுகையில்,``நம் நாட்டின் இறையாண்மையையும், பெருமையையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை முதலில் செலுத்துகிறேன். 

கஸ்தூரி

உலகத்தில் எந்த மூலையில் தீவிரவாதச் செயல்கள் நடந்தாலும் அதன் தொடக்கம் பாகிஸ்தானாக இருக்கிறது. அவர்கள் கேட்டது போல அவர்களை நம்மிடம் இருந்து பிரித்து அனுப்பியும், நமக்கு எதிராக செயல்படுகிறார்கள். என் ரத்தம் கொதிக்கிறது. இனி நம் ராணுவ வீரர்கள் ஒருவர்கூட சாகக்கூடாது. அமெரிக்காவும் சீனாவும் ஆயுத விற்பனை நடத்த வேண்டும் என்பதற்காக சகோதர நாடுகளான நாம் இன்னும் எத்தனை நாள்களுக்கு அடித்துக்கொண்டு சாகப்போகிறோம். 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள்

நான் இப்படிச் சொல்வதனால் என்னைத் தேசத்துரோகி என்றோ பிரிவினைவாதி என்றோ நினைத்துவிட வேண்டாம். இது என்னுடைய உணர்ச்சியின் வெளிப்பாடு. இன்னும் எத்தனை நாள்களுக்கு நம் சகோதரர்களை இழந்து கொண்டிருக்கப் போகிறோம். உலக நாடுகள் இதில் தலையிட்டு சுமுக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அல்லது பாகிஸ்தானுக்கு தைரியமிருந்தால் நம்முடன் நேருக்கு நேர் போர் புரிந்து காஷ்மீரை எடுத்துக்கொள்ளட்டும். இந்தப் பிரச்னை தீர இவைதான் நான் முன்வைக்கிற தீர்வு" என ஆவேசமாக பேசி முடித்தார் கஸ்தூரி.


[X] Close

[X] Close