ஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி! - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு | EPS government spent 15 crore rupees on Advertisement

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (15/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (15/02/2019)

ஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி! - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு

2016 சட்டசபைத் தேர்தலில் வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோவில் 75 நாள்கள் சிகிச்சை பெற்றார். மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் 2016 டிசம்பர் 5-ம் தேதி இறந்து போனார் ஜெயலலிதா. அவருக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். அதன்பிறகு எடப்பாடி முதல்வர் ஆகி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

2016 சட்டசபைத் தேர்தலில் வென்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்த தினம் 2016 மே 23. அன்றுதான் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். வரும் மே 23-ம் தேதியோடு அ.தி.மு.க. ஆட்சிக்கு மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. அந்த விழாவைவிட எடப்பாடி முதல்வர் ஆனதைதான் முன்னதாக கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். எடப்பாடி முதல்வராக பதவியேற்ற 2017 பிப்ரவரி 15-ம் தேதியைதான் `சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு' என கொண்டாடிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. இதற்காக இன்று அனைத்து பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்த தினத்தைவிட எடப்பாடி முதல்வர் ஆன தினம்தான் முக்கியம் என கொண்டாடுவது அ.தி.மு.க. தொண்டர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகைகளில் முதல் மற்றும் கடைசிப் பக்க விளம்பரத்துக்காக கோடிக் கணக்கில் அரசின் பணம் விரையமாக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளியிட்டிருக்கும் விளம்பரத்துக்கு 15 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விளம்பர நாயகியாக ஜெயலலிதா திகழ்ந்தார். அவரைப் போலவே எடப்பாடியும் விளம்பர மோகத்தில் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பெயரில் அர்ச்சனை எனச் சொல்லி தியேட்டர்களில் விளம்பரம் செய்தார்கள். எடப்பாடி பொன்மொழிகள் என புத்தகம் போட்டார்கள். இன்னும் சில வாரங்களில் ஈராண்டு சாதனைக்காக விழா எடுக்கப் போகிறார்களாம். அதற்கு மக்கள் வரிப்பணம் எவ்வளவு போகுமோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close