சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்குத் தூக்கு! - செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு | Chengalpattu court sentenced death to youth over sexual harassment case

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (15/02/2019)

கடைசி தொடர்பு:23:30 (15/02/2019)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்குத் தூக்கு! - செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

திருப்போரூர் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. 

அசோக்குமார்

திருப்போரூர் அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்த பதிமூன்று வயது சிறுமி, பையனூர் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் அவரது வீட்டின் வழியாக அடிக்கடி செல்வார். கடந்த 23.07.2017 அன்று மாலை சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். இதை தெரிந்துகொண்ட அசோக்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு அவரின் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட இருந்ததால் நீதிமன்றத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். ஆனால், தீர்ப்பு வழங்காமல் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பை அறிவித்தார் மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். 

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2012 (போக்ஸோ) பிரிவு (6), இ.த.ச 302, இ.த.ச 376 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. போக்ஸோ சட்டம் பிரிவு 6-ன் படி ஆயுள் தண்டனையும் ரூ.25,000 அபராதமும் இ.த.ச 376 மற்றும் 302 ஆகிய பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும் அளிக்கப்பட்டது.  இந்த வழக்கின் குற்றவாளியான அசோக்குமார், ``நான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. இது பொய்வழக்கு. ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் நான் சொல்கிறேன். இந்த வழக்குக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” என தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close