விருத்தகிரீஸ்வரர் கோயிலில் விபசித்து முனிவருக்குக் காட்சியளிக்கும் ஐதீகத் திருவிழா | virudhachalam virudhagireeswarar temple Festival

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:09:23 (16/02/2019)

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் விபசித்து முனிவருக்குக் காட்சியளிக்கும் ஐதீகத் திருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் திருவிழாவில் 6-ம் நாள் திருவிழாவாக கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்குக் காட்சியளிக்கும் ஐதீகத் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு  தரிசனம்செய்தனர். 

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற  விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு  கடந்த 2-ம் தேதி  காலை  பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் மற்றும் விருத்தாம்பிகை கோயிலில் கொடியேற்றம்  நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் இரவில் வீதியுலா  நடந்துவந்தது.  விழாவின் ஆறாம் நாள் திருவிழாவாக நேற்று   கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்குக் காட்சியளிக்கும்  ஐதீகத் திருவிழா நடந்தது.

இதனை முன்னிட்டு  காலை 6 மணிக்கு பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் பிற்பகல்  விருத்தகிரீஸ்வரர் வெள்ளி  ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்குக் காட்சியளிக்கும்  ஐதீகத் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டு வழிபட்டனர்.  தொடர்ந்து சுவாமி  வீதியுலா நடந்தது.

விருத்தகிரீஸ்வரர்

ஒன்பதாம் நாள் திரு விழாவாக, வரும் 18-ம் தேதி   தேர்த் திருவிழா நடைபெறும். பத்தாம்  நாள் திருவிழாவாக, 19-ம் தேதி மாசி மக உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதியுலா வந்து மணிமுத்தாற்றில் தீர்த்தவாரி நடைபெறும்.  பதினோராம் நாள் திருவிழாவாக,  20-ம் தேதி இரவு  புதுப்பேட்டை அம்மன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப வாகனத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். தொடர்ந்து, 12-ம் நாள் மாசிமகத் திருவிழா பூர்த்தியாக சண்டிகேஸ்வரர் திருவிழா நடைபெறும். 
 
 


[X] Close

[X] Close