புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் - பாகிஸ்தான் தேசியக்கொடியை எரித்த இந்து அமைப்பினர் | Pakistan flag burned at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:11:21 (16/02/2019)

புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் - பாகிஸ்தான் தேசியக்கொடியை எரித்த இந்து அமைப்பினர்

வெடிக்குண்டு தாக்குதல்

காஷ்மீர் வெடிகுண்டுத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கும் நிலையில், அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, திருப்பூரில் பாகிஸ்தான் நாட்டு தேசியக்கொடியை தீயிட்டு எரித்து, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

நேற்று முன்தினம், காஷ்மீரில் ஸ்ரீ நகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலவாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில், மத்திய ரிசர்வ் படை வீரர்களின் வாகன அணிவகுப்பு சென்றுகொண்டிருந்தது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த நபர், சுமார் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் நிரப்பப்பட்ட காரை திடீரென மத்திய ரிசர்வ் படை வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின்மீது மோதி வெடிக்கச்செய்தான். இந்த தீவிரவாதத் தாக்குதலில் 44 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். 

இந்தத் தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. உயிரிழந்த வீரர்களுக்குப் பல்வேறு பகுதிகளில் மக்கள் அஞ்சலிசெலுத்திவருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்து அமைப்பினர் நடத்திய அஞ்சலியின்போது, திடீரென பாகிஸ்தான் நாட்டு தேசியக்கொடியை தீயிட்டு எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


[X] Close

[X] Close