போலீஸுக்கு கொலை மிரட்டல்! குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி | Cuddalore rowdy Arrest by Kundas

வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (16/02/2019)

கடைசி தொடர்பு:10:54 (16/02/2019)

போலீஸுக்கு கொலை மிரட்டல்! குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி

போலீஸாருக்கு கொலை மிரட்டல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார் (40). கடந்த 22-ம் தேதி,  ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீஸார், நிலுவையில் உள்ள வழக்கிற்காக, இருப்பு கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் இருந்த சிவக்குமாரை பிடிக்கச் சென்றபோது, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சிவக்குமாரை கைதுசெய்த போலீஸார், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி சிவக்குமார்

சிவக்குமார் மீது ஊமங்கலம், நெய்வேலி தெர்மல் மற்றும் டவுன்ஷிப் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும்பொருட்டு, கடலூர் எஸ்பி சரவணனின் பரிந்துரையின் பேரில், கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாருக்கு கலெக்டர் உத்தரவு நகல் வழங்கப்பட்டது. 

திலகர்

சேத்தியாத்தோப்பு அருகே, 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியைத் தாக்கிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திலகர் (32), ஜெய்சங்கர் (45) ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து, போலீஸ் திலகரைக் கைதுசெய்தது. ஜெய்சங்கரைத் தேடிவருகிறது.


[X] Close

[X] Close