நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறாரா ஹெச்.ராஜா? | H. Raja is contesting in the election?

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:12:00 (16/02/2019)

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறாரா ஹெச்.ராஜா?

வரவிருக்கும் நாடாளுமன்றத்  தேர்தலில், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடப்போவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

ஹெச் ராஜா

மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா தலைமையிலான அரசின் ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தல், வரும் மே மாதம் நடக்க உள்ளது. தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க தவிர மற்ற கட்சிகள் கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதியாகிவருகிறது. இதற்காகவே, மத்தியில் இருந்து பியூஷ் கோயல் தமிழகம் வந்தார். இதையடுத்து, அ.தி.மு.க-வுடனான கூட்டணி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும், வரும் பௌர்ணமிக்குள் இந்த அறிவிப்பை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இணைந்து வெளியிடும் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

அதிமுக

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தென் சென்னைத் தொகுதியைக் கேட்டிருக்கிறார். தமிழிசை போட்டியிடுவாரா என்பதைத் தலைமை இன்னும் முடிவுசெய்யவில்லை. ஆனால், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அவரது சொந்த ஊரான சிவகங்கை அல்லது தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்கிறது, பா.ஜ.க வட்டாரங்கள். இதுவரை இழுத்தடிக்கப்பட்ட கூட்டணி, தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்று முடிவாகும்.

தமிழிசை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அமெரிக்காவில் இருந்து இன்று தமிழகம் வந்த நிலையில், இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க தொகுதிப் பங்கீடு முடிவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தாமரையை மலரவைக்க எல்லா முயற்சிகளும் நடந்துவருகின்றன என்கிறார் அ.தி.மு.க பிரமுகர்.


[X] Close

[X] Close