பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக தென்னை மரத்தூள் தட்டுகள்! - பயன்பெறும் விவசாயிகள் | Coconut wooden plate replaced for plastic plates

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (16/02/2019)

கடைசி தொடர்பு:12:50 (16/02/2019)

பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக தென்னை மரத்தூள் தட்டுகள்! - பயன்பெறும் விவசாயிகள்

தஞ்சாவூரில் இயங்கிவரும் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு பதினீட்டுக்கழகம், தென்னை மரத்தூளை மூலப்பொருளாகக் கொண்ட தட்டுகளை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பிஸாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள சூழலில், தென்னை மரத்தூள் தட்டுகளுக்கு மக்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னை மரத்தூள் தட்டு

கஜா புயலின் கொடூரத் தாக்குதலில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால், இப்பகுதிகளில் உள்ள ஏராளமான தென்னை விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்தார்கள். இது ஒருபுறமிருக்க, வீழ்ந்த தென்னை மரங்களை எப்படி அப்புறப்படுத்துவதென்பது தெரியாமல் தவித்துவந்தார்கள். இந்த மரங்களை விலைக்கு வாங்கிக்கொள்ள மர வியாபாரிகள் தயாராகவில்லை. ஒருசில ஊர்களில் செங்கல் சூளைக்காரர்கள் இலவசமாக எடுத்துச்சென்று எரிபொருளாகப் பயன்படுத்தினர்.  அதன் பிறகு, அவர்களும் இவற்றை எடுத்துச்செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகள் செய்வதறியாது நின்றார்கள்.

தஞ்சாவூர் இந்திய உணவு பதனிட்டூக்கழகத்தினர்

இந்நிலையில்தான், தஞ்சாவூர் இந்திய உணவு பதனிட்டூக்கழகம், தென்னை மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் நடத்தியது. அதில், இந்நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், தென்னை மரத்தூளைப் பதப்படுத்தி உருவாக்கப்பட்ட தட்டுகளை அறிமுகப்படுத்தினார். ‘’ஒரு தட்டு மூன்று ரூபாய் என்ற விலைக்கு விற்பனைசெய்ய வாய்ப்புள்ளது. பல வடிவங்களில் இந்தத் தட்டுகளை உருவாக்கி விற்பனை செய்ய முடியும். இதன்மூலம் கிடைக்கக்கூடிய வருமானம், விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே இந்த முயற்சியில் இறங்கினோம். இது, சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது. இதனைப் பயன்படுத்திவிட்டு மண்ணில் வீசினால், அடுத்த சில நாள்களிலேயே மக்கிவிடும்” என்றார்.   


[X] Close

[X] Close