தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்! - மெத்தனம் காட்டியதால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி | Rs 100 crore fine for Tamil Nadu government in koovam issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (16/02/2019)

கடைசி தொடர்பு:13:20 (16/02/2019)

தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்! - மெத்தனம் காட்டியதால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

சென்னையின் நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

கூவம் 

சென்னையின் நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயைப் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2013-ம் ஆண்டிலிருந்து நடந்துவந்த இந்த வழக்கில்,  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 13-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அதில், ``கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட பொதுப்பணித்துறை காரணமாகிவிட்டது.  

தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

இதனால் 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். அதேநேரம், வருகிற ஏப்ரல் 23-ம் தேதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்தது.

தமிழக அரசு

மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ்  ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் எனவும், இது தொடர்பாக 3 மாதத்தில் அறிக்கை தாக்கல்செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close