`அதுதான் எனக்கும் பிடிக்கும்!’ - ரன்வீர் சிங்கை பாராட்டிய வில் ஸ்மித் | Will Smith congratulates Ranveer Singh for 'Gully Boy' movie!

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (16/02/2019)

கடைசி தொடர்பு:14:54 (16/02/2019)

`அதுதான் எனக்கும் பிடிக்கும்!’ - ரன்வீர் சிங்கை பாராட்டிய வில் ஸ்மித்

ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடித்து சமீபத்தில் வெளியான `கல்லி பாய்’ திரைப்படம் பாலிவுட் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல ராப் பாடகரும் நடிகருமான வில் ஸ்மித் இப்படத்தைப் பார்த்து, ரன்வீர் சிங்கை பாராட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் வில் ஸ்மித், ``வாழ்த்துகள் ரன்வீர் சிங். `கல்லி பாய்’ படத்தில் உங்களது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உலகம் முழுவதும் `ஓல்ட் ஸ்கூல் ஹிப் ஹாப்' (Old School Hip Hop) தான் பிரபலமாக இருக்கிறது. அதுதான் எனக்கும் பிடித்தமான ஒன்று’’ என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ஆலியா பட் மற்றும் இப்படத்தின் இயக்குநர் ஸோயா அக்தர் ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். 

Gully Boy

மேலும், கரன் ஜோகர் தயாரிக்கும் `ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்-2’ படப் பாடல் ஷூட்டிங் ஒன்றுக்காக வில் ஸ்மித் இந்தியா வந்திருந்தபோது, ரன்வீர் சிங் மற்றும் கரண் ஜோகர் ஆகியோருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் கரணின் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் 'கல்லி பாய்' ஷூட்டிங் மும்பையில் நடந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Gully Boy

இப்படத்தில் ரன்வீர் ஏழு ராப் பாடல்களைப் பாடியிருக்கிறார். மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த நேஸி மற்றும் டிவைன் ராப்பர்களின் வாழ்க்கையின் உண்மை சம்பவங்கள் சேர்க்கப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   


[X] Close

[X] Close