பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி!  - 19-ம் தேதி அறிவிக்கிறார் பியூஷ் கோயல்? | piyush goyal will announce BJP - AIADMK Alliance on coming tuesday

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (16/02/2019)

கடைசி தொடர்பு:15:50 (16/02/2019)

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி!  - 19-ம் தேதி அறிவிக்கிறார் பியூஷ் கோயல்?

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மீண்டும் தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பியூஷ் கோயல்

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பா.ஜ.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தக் கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வரைப் பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது அதிகாரபூர்வமற்றதாகவே இருந்தது. ஆனால் 14-ம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அ.தி.மு.க அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் நடந்த சந்திப்பின்போது இரு கட்சியிலும் உள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். 

பியூஷ் கோயல்

இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய பியூஷ் கோயல், ``தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்திருக்கிறேன். பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்" என்று கூறினார். தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவை எப்போது இறுதிவடிவம் பெறும், எப்போது தொகுதிகள் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலே இருந்தது. 

பியூஷ் கோயல்

இதுகுறித்து விசாரித்தபோது, ``கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை முடியும் தருவாயில் உள்ளன. இதற்காக வரும் 19-ம் தேதி மீண்டும் சென்னை வர இருக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அப்போது கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார். இதில், பா.ஜ.கவுக்கு எட்டு இடங்கள் வரையில் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close