ஏழு பேரை விடுதலை செய்யுங்கள் - ஸ்ரீவில்லிப்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்! | srivilliputtur lawyers association urges perarivalan release

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (16/02/2019)

கடைசி தொடர்பு:17:10 (16/02/2019)

ஏழு பேரை விடுதலை செய்யுங்கள் - ஸ்ரீவில்லிப்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாகச் சிறைச்சாலையில் இருந்து வருகிறார்கள். இவர்களின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார் ஆளுநர். ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் எனப் பலரும் குரல்கொடுத்துவரும் நிலையில், பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார். இதுவரை 12 நகரங்களில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களிடம் ஏழு பேர் விடுதலை குறித்த கருத்துகளையும் கேட்டு வருகிறார். 

வழக்கறிஞர்கள் சங்கம்

இந்த நிலையில், ஏழு பேரையும் விடுவிக்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்கத் தலைவர் கதிரேசன், செயலாளர் திருமலையப்பன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ``ஏழு பேரும் 28 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருவதைக் கருத்தில் கொண்டும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை மதித்தும் தாமதிக்காமல் ஆளுநர் கோப்பில் கையெழுத்திட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே, ஏழு பேர் விடுதலையை வலியுறுத்திப் பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவது இதுவே முதல் முறையாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close