வீரர்களுக்கு அஞ்சலி!- தமிழகம், புதுச்சேரியில் 15 நிமிடம் பெட்ரோல் பங்க்குகள் செயல்படாது | TN puducherry Petrol Bunk association to pay tributes to pulwama terror attack victims

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (16/02/2019)

கடைசி தொடர்பு:16:28 (16/02/2019)

வீரர்களுக்கு அஞ்சலி!- தமிழகம், புதுச்சேரியில் 15 நிமிடம் பெட்ரோல் பங்க்குகள் செயல்படாது

ஜம்மூ-காஷ்மீரின் புல்வாமா மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மரணமடைந்தனர். இதில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோருடன், கேரளாவைச் சேர்ந்த வசந்தகுமார், கர்நாடகாவைச் சேர்ந்த மாண்டியா ஆகியோரும் அடங்குவர்.

இந்தத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இவர்களின் உடல்களை அந்தந்த மாநிலத்துக்கு அனுப்பி, உரிய அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், வீரமரணமடைந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் பங்க்

நம்மில் ஒருவராக இருந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பெட்ரோல் பங்க்களும் இன்று இரவு 8 மணி முதல் 8:15 மணி வரை செயல்படாது என அறிவிப்பு வந்துள்ளது. அந்த 15 நிமிடமும் வீரமரணமடைந்த நம் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close