``நாட்டுக்காக உயிர் போறதுக்கு இது வயசு இல்லையே!''- விம்மிய சுப்பிரமணியன் மனைவி | ''this is not age died for country''- says Subramaniam wife

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (16/02/2019)

கடைசி தொடர்பு:15:42 (17/02/2019)

``நாட்டுக்காக உயிர் போறதுக்கு இது வயசு இல்லையே!''- விம்மிய சுப்பிரமணியன் மனைவி

சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி

காஷ்மீர் மாநிலம் புல்மாவில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவப்படையினர் மரணம் அடைந்தனர். பலியான வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முதல் காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை நீர்த்துள்ளனர். தமிழகத்தில் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீர மரணமடைந்துள்ளனர். இவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

நாட்டுக்கா உயிர் நீத்த சுப்பிரமணியம் தனது மனைவியுடன்

பலியான சுப்பிரமணியத்துக்கு 30 வயதுதான் ஆகிறது. திருமணமாகி ஒன்றாரை ஆண்டுகள்தான் ஆகிறது. மனைவியின் பெயர் கிருஷ்ணவேணி. திருமணமான ஒன்றாரை ஆண்டுகளுக்குள் கணவரை பறிகொடுத்து விட்டு கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் கிருஷ்ணவேணிக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லாமல் கிராம மக்களும் உறவினர்களும் தவித்து வருகின்றனர். கணவர் உடலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணவேணி, 'அவர் எப்போதுமே நாட்டுக்காக உயிர் போகணும்னுதான் சொல்லிக் கொண்டிருப்பார். நாட்டுக்காக சாகுறது பெருமைதான். அதுக்காக இது சாகுற வயது இல்லயே'  என்று விம்மியபோது சுற்றிருந்தவர்கள் கண்கள் மேலும் குளமாகின.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் பலியான இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close